இந்த ஆண்டு கேம்பஸ் உண்டு... புதியவர்களுக்கு நம்பிக்கை தரும் என்சோனோ!

என்சோனோ
என்சோனோ

இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதியவர்களை  வேலைக்கு எடுத்து சென்னையில் தனது அலுவலகத்தை விரிவுபடுத்தப் போவதாக அமெரிக்க ஐ.டி நிறுவனமான என்சோனோ (Ensono) தெரிவித்துள்ளது.

நாட்டின் இரண்டாவது  பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் 2024 ம் நிதியாண்டில் 1- 2.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என கூறப்பட்டு உள்ளதால் இந்த வருடம் புதியவர்களை பணியில் சேர்க்க கல்லூரிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூவ் செல்லவில்லை என அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நிறுவனத்தில் அளவுக்கு அதிகமாக புதியவர்கள் இருப்பதாகவும், இதோடு அமெரிக்கா போன்ற முக்கிய வர்த்தக சந்தையில் மந்த நிலை உருவாகியிருப்பதை காரணமாக கூறுகிறது. 

இன்போசிஸ் இந்த அறிவிப்பால் பட்டதாரிகள் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் சென்னையில் Ensono நிறுவனம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு பல்வேறு தொழில்நுட்பத்தில் ஐ.டி சேவைகளை வழங்கும் நிறுவனமாக இருக்கும் Ensono 2023 ம் ஆண்டில் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெறும் திறமையான பட்டதாரிகளை பணியில் அமர்த்துவதன் மூலம் சென்னை அலுவலகத்தில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை பெரிய அளவில் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 

நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் என்சோனோ, விப்ரோவின் டேட்டா சென்டர் வணிகத்தை கைப்பற்றியதன் மூலம் 2018 ல் இந்தியாவில் நுழைந்தது. இந்தியாவுக்கு வந்த புதிதில் என்சோனோ புனேவில் சுமார் 400 அசோசியேட் ஊழியர்கள் கொண்ட குழுவுடன் தனது வர்த்தகத்தை  துவங்கியது. தற்போது  என்சோனோ புனே, சென்னை மற்றும் பெங்களூரு என 3 நகரங்களில் சுமார் 1,500 ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

என்சோனோ தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாரம்பரிய தொழில்நுட்ப சேவைகளை (legacy technologies) இயக்கவும், நிர்வகிக்கவும் உதவுகிறது. இதோடு பழைய தொழில்நுட்பத்தில் இருந்து கிளவுட் சேவைக்கு மாற்றும் முக்கியமான சேவைகளையும் அளிக்கிறது. சமீபத்தில் புனேவில் சுமார் 30 புதியவர்களை பணியமர்த்தியதாகவும், இதைத் தொடர்ந்து சென்னையிலும் பட்டதாரி மாணவர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் என்சோனோ நிறுவனத்தின் CEO ஜெஃப் வான் டெய்லன் கூறியுள்ளார். 

மேலும் அவர், என்சோனோ நிறுவனம் 2023 ம் ஆண்டில் சுமார் 12% வருவாய் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய தேவையான ஊழியர்களை பணியில் அமர்த்தி இந்தியாவில் ஊழியர்களின் எண்ணிக்கையை 10% - 15% வரம்பில் வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தைப்போல் 20,000 - 40,000 பேருக்கு ஒரு வருடத்தில் வேலைவாய்ப்புகளை கொடுக்க முடியாவிட்டாலும், என்சோனோ மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவர்கள் நம்பிக்கை பெற்றுள்ளார்கள்.


இதையும் வாசிக்கலாமே... கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!

HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!

காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!

உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!

அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in