உலகின் மாசு நிறைந்த மோசமான நகரங்களின் டாப் 10 பட்டியல்... தீபாவளியால் 3 இந்திய நகரங்கள் இணைந்தன

காற்று மாசுக்கு காரணமான தீபாவளி
காற்று மாசுக்கு காரணமான தீபாவளி

உலகின் மாசு நிறைந்த மோசமான நகரங்களின் டாப் 10 பட்டியலில் டெல்லி முதலிடம் பிடித்திருந்த நிலையில், தீபாவளி காரணமாக மேலும் 2 இந்திய நகரங்கள் அதில் இணைந்துள்ளன.

காற்று மாசுபாட்டில்உலகின் மிக மோசமான 10 நகரங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி வழக்கம்போல முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ’ஐக்யூ ஏர்’ என்ற அமைப்பின் கண்காணிப்பின்படி, தீபாவளிக்கு முன்னர் டெல்லியின் காற்று மாசு, அதன் தரக் குறியீடு அளவில் 420 என்பதாக இருந்தது.

காற்று மாசு
காற்று மாசு

இந்த மோசமான நகரங்களின் டாப் 10 பட்டியலில் கூடுதலாக 2 இந்திய நகரங்கள் தற்போது இணைந்துள்ளன. காற்று தரக்குறியீடு 196 என்றளவில் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது கொல்கத்தா. இன்னொரு இந்திய பெருநகரமான மும்பை காற்று தரக் குறியீடு 163 என்றளவில் எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. காற்று மாசுவில் மோசமான டாப் 10 நகரங்களில் டெல்லி மட்டுமே இருந்துவந்த சூழலில் புதிதாக கொல்கத்தா, மும்பை என இரு நகரங்கள் இணைவதற்கு தீபாவளி காரணமாகி இருக்கிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ஊர்கூடி பட்டாசுகளை வெடித்ததில் காற்று மாசு உச்சம் பெற்றுள்ளது. காற்று தரக்குறியீடு அளவைப் பொறுத்து, டெல்லியில் உள்ளதைப் போன்று 400 - 500 என்றளவுக்கு மோசமடைவது ஆரோக்கியமான மக்களையும் பாதிக்கக்கூடியது. மேலும் ஏற்கனவே நோயுற்றவர்களை தீவிரமான பாதிப்புகளுக்கு ஆளாக்கக்கூடியது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தீவிர சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு மோசமானது.

காற்று மாசு
காற்று மாசு

டெல்லியின் காற்று தரக்குறியீடு தீபாவளி அன்று 680 என்ற அளவுக்கு மோசமடைந்தது. தடிமனான போர்வை போன்று புகை மூட்டம் உருவாகி தலைநகரை அச்சுறுத்தியது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ளதைப் போன்று, 150 - 200 என்றளவில் காற்று தரக்குறியீடு அமைந்திருப்பது, ஏற்கனவே ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் இதயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை தரக்கூடியது. 0 - 50 என்றவில் காற்று தரக்குறியீடு அமைவது மட்டுமே, உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட அளவாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!

ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!

திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!

300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in