அதிர்ச்சி... நாடு முழுவதும் 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கம்... மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் 11.50 கோடி பான் கார்டுகள் முடக்கம்
நாடு முழுவதும் 11.50 கோடி பான் கார்டுகள் முடக்கம்

நாடு முழுவதும் ஆதார் கார்டுடன் இணைக்காத 11.50 கோடி பான் கார்டுகளை முடக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வருமானம் பெறும் அனைவருக்கும் நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்ட் எண், வருமானவரித்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு மோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை போன்ற முறைகேடுகளை தவிர்க்க, அனைவரும் பான் என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமானவரித்துறை அறிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதியுடன் இதற்கான காலக்கெடு முடிவடைந்தது.

ஆதாருடன் இணைக்காததால் பான் கார்டுகள் முடக்கம்
ஆதாருடன் இணைக்காததால் பான் கார்டுகள் முடக்கம்

ஜூலை 1ம் தேதிக்கு பிறகு ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்கள் செயலிழக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆதார் உடன் இணைக்காத 11.50 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகளை, செயலிழக்க வைத்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம்
மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ள மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், ”ஆதாருடன் பான் கார்டுகளை இணைக்க போதுமான அளவு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 57.25 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவை பலமுறை நீட்டித்தும் பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்காத 11.50 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டு விட்டது. முடக்கப்பட்ட பான் கார்டுகளை நிரந்தரமாக பயன்படுத்த முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in