தன் பாலினத்தவர் திருமணம்... உச்ச நீதிமன்றத்தின் 4 மாறுபட்ட தீர்ப்பால் பரபரப்பு!

தன் பாலின இணை
தன் பாலின இணை

தன் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிகள், நான்கு விதமான மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தன் பாலின ஜோடி
தன் பாலின ஜோடி

சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உத்தரவிடக்கோரி தன் பாலின ஜோடி ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற உயர்நீதிமன்றங்களில் உள்ள தன் பாலின திருமண வழக்குகளை விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.

அந்த மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்தது.விசாரணையின் போது, தன் பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், தன் பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பு என்ற கருத்துடன் ஒத்து போகாது. தன் பாலின திருமணத்தை சட்டப் பூர்வமாக்கக்கூடாது. இது தொடர்பாக 7 மாநிலங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளன. ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் மாநிலங்கள் இதை எதிர்த்துள்ளன என குறிப்பிட்டுள்ளது.

பின்னர் உச்ச நீதிமன்றம் தனது இறுதி உத்தரவை கடந்த மே 11-ம் தேதி ஒத்திவைத்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த, நிலையில், தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ரவீந்திர பாட், நீதிபதி நரசிம்மா, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று மாறுபபட்ட தீர்ப்பு வழங்கி வருகிறது. மொத்தமுள்ள 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் தனித்தனியே தீர்ப்பு வழங்கி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in