தியாகி பென்ஷனுக்காக 40 ஆண்டுகளாக தடுமாறும் சுதந்திர போராட்ட வீரர்... மத்திய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

96 வயது சுதந்திர போராட்ட தியாகி தனது பென்ஷனுக்காக கடந்த 40 வருடங்களாக அலைக்கழிக்கப்படுவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

பீகாரை சேர்ந்த உத்தம் லால் சிங் என்பவருக்கு இப்போது 96 வயதாகிறது. இளம் வயதில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை சென்றிருக்கிறார். குடும்ப நிலத்தையும் பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் இழந்திருக்கிறார். இவர் மத்திய அரசின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்துக்காக விண்ணப்பித்து 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. மாநில அரசு பலமுறை உத்தம் லாலின் தியாகி பென்ஷன் மனுவை பரிந்துரை செய்தும் மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை.

பென்ஷன்
பென்ஷன்

பொறுத்துப் பார்த்த உத்தம் லால் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் கடும் வேதனையடைந்தார். ”நாட்டின் விடுதலைக்காக ரத்தம் வேர்வையும் சிந்திய ஒருவருக்கு, சுதந்திர நாட்டில் இதுதான் மரியாதையா. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தனது நிலம் உட்பட உடைமைகளை இழந்தவரை, இப்படித்தான் அரசு அலுவலகங்களின் தூண்களுக்கு மத்தியில் ஓட விடுவதா?” என கடுமையாக கேள்விகளை தொடுத்தார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தம் லால் இழுத்தடிக்கப்பட்டதற்காக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அதற்காக அரசுக்கு ரூ20,000 அபராதம் விதித்தார். மேலும், ’ அடுத்த 6 வாரங்களுக்குள் உத்தம் சிங்கின் பென்ஷனை வழங்க வேண்டும் என்றும், 1980 முதல் தற்போது வரை பென்ஷன் நிலுவையை 6 சதவீத வட்டியுடன் அடுத்த 12 வாரங்களுக்குள் வழங்குமாறும்’ நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in