ரூ.10 கோடி பரிசு எனக்கா?... நம்ப முடியாமல் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்; அடித்தது பம்பர் லாட்டரி!

ரூ.10 கோடி பரிசு விழுந்த ஆட்டோ ஓட்டுநர் நாசர்
ரூ.10 கோடி பரிசு விழுந்த ஆட்டோ ஓட்டுநர் நாசர்

கேரளாவில் பம்பர் லாட்டரியை கடைசி நேரத்தில் வாங்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 2003ம் ஆண்டுக்கு பிறகு லாட்டரி சீட்டு விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அண்டை மாநிலமான கேரளா மற்றும் சிக்கிம், பஞ்சாப், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி சீட்டுக்கு அனுமதி உள்ளது. குறிப்பாக கேரளாவில் மாநில அரசே லாட்டரி சீட்டு விற்பனையை நடத்தி வருகிறது. அவ்வப்போது பம்பர் குலுக்கல் என்ற பெயரில் லாட்டரி சீட்டு விற்பனையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது.

கேரள மாநில சம்மர் பம்பர் குலுக்கல் லாட்டரி
கேரள மாநில சம்மர் பம்பர் குலுக்கல் லாட்டரி

இந்த லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை 250 ரூபாய் ஆகும். 36 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், 33.6 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இந்த பம்பர் லாட்டரியின் முதல் பரிசு 10 கோடி ரூபாய் ஆகும். கேரளா மட்டுமின்றி எல்லையோர மாவட்டங்களில் உள்ள மக்களும் இந்த லாட்டரி சீட்டுகளை ஆர்வத்துடன் வாங்கி இருந்தனர். குறிப்பாக கடந்த கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசு புதுவையைச் சேர்ந்தவருக்கு கிடைத்திருந்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோரும் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்கி இருந்தனர். இதனால் இந்த லாட்டரி சீட்டில் முதல் பரிசான 10 கோடி ரூபாய் யாருக்கு விழும் என்பது கேரள மாநில மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

பணம்
பணம்

இந்த லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. அப்போது SC308797 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதே போல் SA17547 என்ற டிக்கெட்டுக்கு இரண்டாம் பரிசான ஐம்பது லட்சம் ரூபாய் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த முதல் பரிசு வாங்கியவர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது அவர் யார் என்பது தெரிய வந்துள்ளது. கன்னூர் மாவட்டம் கார்த்திகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாசர் என்பவருக்கு இந்த முதல் பரிசு விழுந்துள்ளது தெரியவந்திருக்கிறது.

நேற்று வரை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நாசர், ஒரே நாள் இரவில் தான் மிகப்பெரிய கோடீஸ்வரனாகி இருப்பதை நம்பவே முடியவில்லை என ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இறுதி நேரத்தில் இந்த டிக்கெட்டை நாசர் வாங்கியுள்ளார். லாட்டரியில் பரிசு விழுந்ததும், நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலில் ’ஒரு நிமிஷம் தலையை சுத்திருச்சு’ என்று சக நண்பர்களிடம், நாசர் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இரண்டாவது பரிசு யாருக்கு விழுந்துள்ளது என்பது தொடர்பாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. வருகிற ஏப்ரல் மாதத்தில் 12 கோடி பரிசுக்கான விஷு பம்பர் நடைபெற உள்ள நிலையில், நாளை இதற்கான லாட்டரி சீட்டு விற்பனை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in