அமலாக்கத் துறை என்னை கைது செய்திருப்பது தான் ஊழல்... நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் பரபரப்பு வாதம்!

அமலாக்கத் துறை, அர்விந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத் துறை, அர்விந்த் கேஜ்ரிவால்

அமலாக்கத் துறை என்னை கைது செய்திருப்பதுதான் ஊழல் என டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் முதல்வர் கேஜ்ரிவால் பரபரப்பாக வாதாடினார்.

நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லியில் கடந்த 2021-22-ம் ஆண்டில் கலால் கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறி அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் வழங்கிய அவகாசம் இன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கேஜ்ரிவாலை டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை இன்று மீண்டும் ஆஜர்படுத்தியது.

அப்போது தனது வழக்கில் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் சுயமாக வாதாடினார். அப்போது கேஜ்ரிவால் கூறியதாவது:

"அமலாக்கத்துறையின் ரிமாண்ட் மனுவை நான் எதிர்க்கவில்லை. அமலாக்கத்துறை என்னை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காவலில் வைக்கலாம். ஆனால், இது தான் ஊழல்.

அமலாக்கத் துறைக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவது. மற்றொன்று ஒரு மாயத்திரையை உருவாக்கி அதன் பின்னால் மிரட்டி பணம் பறிக்கும் மோசடியை நடத்துவது. ரூ.100 கோடிக்கு மதுபான மோசடி நடந்திருந்தால், அந்தப் பணம் எங்கே? அமலாக்கத் துறையின் விசாரணை தொடங்கிய பிறகுதான் உண்மையான மோசடியும் தொடங்கியது.

நான் கைது செய்யப்பட்டேன். எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று நிரூபிக்கவில்லை. சிபிஐ 31 ஆயிரம் பக்கங்களையும், அமலாக்கத்துறை 25 ஆயிரம் பக்கங்களையும் தாக்கல் செய்துள்ளன. நீங்கள் அவை இரண்டையும் ஒருசேர படித்தாலும், நான் கைது செய்யப்பட்டதற்கு எந்த காரணமும் அதில் இல்லை.”

இவ்வாறு கேஜ்ரிவால் வாதாடினார்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

இந்நிலையில் கேஜ்ரிவால் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும், அவரிடம் மேலும் விசாரணை நடத்த 7 நாள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கேஜ்ரிவால் விசாரணைக்கு நன்றாக ஒத்துழைத்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து கேஜ்ரிவாலின் காவலை மேலும் 4 நாள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின்போது, கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், டெல்லி அமைச்சர்கள் கோபால் ராய், அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in