பெண்கள் விடுதிக்குள் நுழைத்து பிடிபட்ட வாலிபர்
பெண்கள் விடுதிக்குள் நுழைத்து பிடிபட்ட வாலிபர்

பெண் வேடமிட்டு விடுதிக்குள் நுழைந்த வாலிபர்... வெளுத்துக் கட்டிய வார்டன்: வைரலாகும் வீடியோ!

பெண் வேடமிட்டு பெண்கள் விடுதிக்குள் நுழைந்து வாலிபர் தர்ம அடி வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காதலியைப் பார்ப்பதற்கான கதாநாயகன், தனது நண்பருடன் பெண் வேடமிட்டு விடுதிக்குள் செல்வது போல பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அப்போது, அங்கு உண்மை தெரிந்த பின்பு கதாநாயகனும், அவரது நண்பரும் தலைதெறித்து தப்பித்து ஓடி விடுவார்கள். அப்படி சினிமா பாணியில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர், வார்டனிடம் சிக்கிக் கொண்ட வீடியோ தான், தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இருபத்தைந்து வயது வாலிபர் ஒருவர், பெண் வேடமணிந்து பெண்கள் விடுதிக்குள் நுழைந்துள்ளார். அப்போது அவரை விடுதியின் பெண் வார்டன் பார்த்து விட்டு சத்தம் போடுகிறார். இதையடுத்து மாணவிகள்,ஊழியர்கள் திரண்டு விடுகின்றனர். அவர்களிடம் பெண் வேடமிட்ட வாலிபர் சிக்கிக் கொள்கிறார். அவரை கையில் கிடைத்த பொருளால் பெண் வார்டன் அடித்து துவைக்கிறார். அத்துடன் மாணவிகள், ஊழியர்கள் அந்த வாலிபரை அடித்து இழுத்துச் செல்கின்றனர். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பான வீடியோ @gharkalesh என்ற எக்ஸ் கணக்கில் இருந்து தற்போது வெளியிடப்பட்டுள்ளளது, பெண் வேடமணிந்து பெண்கள் விடுதிக்குள் பதுங்கியிருந்த ஆண் பிடிபட்டார் என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in