பாம்பு விஷத்துடன் ரகசிய போதை விருந்து; 5 பேர் கைதானபோதும், யூடியூபர் மட்டும் எஸ்கேப்!

ரகசிய விருந்தில் பங்கேற்றவர் கைது - எல்விஷ் யாதவ்
ரகசிய விருந்தில் பங்கேற்றவர் கைது - எல்விஷ் யாதவ்

பாம்பு விஷத்துடன் ரகசிய பார்ட்டி நடத்திய வழக்கில் யூடியூபர் தவிர்த்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் மீது வெளிச்சம் பாய்ச்சிய மேனகா காந்திக்கு எதிராக, தலைமறைவாக இருக்கும் யூடியூபர் தாக்குதல் தொடுத்தும் வருகிறார்.

மக்களவை உறுப்பினரும் பிராணி நல ஆர்வலருமான மேனகா காந்தி, விலங்குகள் நலத்துக்கான என்ஜிஓ ஒன்றையும் நடத்தி வருகிறார். அண்மையில் மேனகா காந்தி அளித்த பேட்டி ஒன்றில், பாம்பு விஷத்தை பயன்படுத்தி நடைபெறும் ரகசிய போதை விருந்துகள் குறித்து பகீர் கிளப்பினார்.

மேனகா காந்தி - எல்விஷ் யாதவ்
மேனகா காந்தி - எல்விஷ் யாதவ்

இதனையடுத்து மேனகா காந்தியின் என்ஜிஓவை சேர்ந்தவர்கள், நொய்டா பண்ணை வீடுகளில் நடைபெறும் போதை விவகாரம் தொடர்பாக ஆராய கிளம்பினர். அந்த வகையில் பண்ணை வீடு ஒன்றில் ரகசிய போதை பார்ட்டி நடத்தியதாக போலீஸார் பிடியில் 5 பேர் சிக்கினார்கள். இந்த பார்ட்டி மற்றும் போதைக்கான பாம்புகளை பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் என்பவர் ஏற்பாடு செய்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பார்ட்டியில் பங்கேற்றவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும்அங்கு போதைக்காக வைத்திருந்த 2 நாகங்கள், 2 இருதலை பாம்புகள் உட்பட 9 பாம்புகள் கைப்பற்றப்பட்டன. மேலும் தலைமறைவாக இருக்கும் யூடியூபர் எல்விஷ் யாதவை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதனிடையே இந்த விவகாரத்தின் மீது வெளிச்சமடித்த மேனகா காந்திக்கு எதிராக, யூடியூபர் எல்விஷ் யாதவ் பாய்ந்துள்ளார். இஸ்கான் நிறுவனம் தங்கள் கால்நடை பண்ணைகளில் இருந்து, பால் வற்றிய மாடுகளை அடிமாடுகளாக விற்பதாக முன்னதாக மேனகா காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதனை மேற்கோள் காட்டிய எல்விஷ் யாதவ், “முன்னர் இஸ்கான் நிறுவனம்; இப்போது நானா” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தனக்கு நெருக்கமான அரசியல் பிரபலங்களின் உதவியோடு எல்விஷ் யாதவ், போலீஸ் பிடியில் சிக்காது உலா வருவதாக சொல்லப்படுகிறது. பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் 2வது சீஸனில் பங்கேற்று டைட்டில் வென்றதன் மூலம், எல்விஷ் யாதவ் இந்தியாவில் பிரபலமானார். அந்த பிரபல்யத்தை பயன்படுத்தி உற்சாக விருந்துகளை அரங்கேற்றி வருவதாகவும் எல்விஷ் யாதவ் தற்போது குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

2023 கிரிக்கெட் : சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள்... டாப் லிஸ்ட்டில் 3 இந்தியர்கள்!

நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!

கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!

மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!

அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in