மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்... 60,000 வீரர்களின் மூன்றடுக்கு பாதுகாப்பில், சத்தீஸ்கரின் 600 வாக்குச்சாவடிகள்

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் பகுதியில் பாதுகாப்பு படையினர்
மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் பகுதியில் பாதுகாப்பு படையினர்

60,000 பாதுகாப்பு படை வீரர்களின் துணையோடு, நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கரின் பஸ்தர் கோட்டம், 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேர்தலை சந்திக்க இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் நவ.7 மற்றும் 17 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இவற்றில் நக்சல்கள் அச்சுறுத்தல் நிரம்பிய பஸ்தர் கோட்டத்தின் 12 தொகுதிகளை உள்ளடக்கிய 600 வாக்குச்சாவடிகளின் பாதுகாப்புக்காக 60 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்தரில் பாதுகாப்பு படையினர்
பஸ்தரில் பாதுகாப்பு படையினர்

பஸ்தர் கோட்டத்தில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் காரணமாக இப்பகுதி வாக்குச்சாவடியில் பணியாற்ற அரசு ஊழியர்கள் எவரும் முன்வராததோடு, அச்சம் காரணமாக வாக்காளர்களும் தேர்தலை புறக்கணித்து வந்தனர். இந்த வகையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ்தர் கோட்டத்தின் பெரும்பகுதி தேர்தல்களை சந்திக்காது இருந்தன.

இப்பகுதிகளில் இம்முறை தேர்தல் நடத்தியே தீர்வது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்காக மாநில அரசு மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்து திட்டங்கள் தீட்டியது. முதல்கட்டமாக அப்பகுதியிலிருந்து மாவோயிஸ்டுகள் களையெடுக்கப்பட்டனர். அடித்தபடியாக வாக்களிக்க வரும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டன.

பஸ்தரில் பாதுகாப்பு படையினர்
பஸ்தரில் பாதுகாப்பு படையினர்

பஸ்தர் கோட்டத்தின் 7 மாவட்டங்களை சேர்ந்த 12 தொகுதிகளில், 60க்கும் மேலான முகாம்கள் அமைத்து பாதுகாப்பு படையினர் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். உள்ளூர் போலீஸார் மட்டுமன்றி, டிஆர்ஜி, எஸ்டிஎஃப், கோப்ரா, சிஆர்பிஎஃப், ஐடிபிபி என நாட்டின் அனைத்து பாதுகாப்பு படையினரும் இந்த கிராமங்களில் தற்போது அணி திரண்டுள்ளனர்.

மக்களின் கூடுதல் பாதுகாப்புக்காக வீடு - வாக்குச்சாவடிக்கு இடையிலான தொலைவை குறைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மாவோயிஸ்ட் அச்சத்துக்கு உரிய 149 வாக்குச்சாவடிகளை அருகிலுள்ள காவல்நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு முகாம்களுக்கு இடம்மாற்றி உள்ளனர். விடிந்தால் ஜனநாயகத் திருவிழாவுக்கு தயாராகும் பஸ்தர் கோட்டத்தில், வாக்களிக்கப்போகும் பெரும்பாலானோருக்கு வாழ்நாளில் அது முதல் அனுபவமாக இருக்கப்போகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சனாதனம் குறித்து நான் பேசியது தவறில்லை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ... கொந்தளித்த அமிதாப் பச்சன்!

விஜய் நிச்சயமா அரசியலுக்கு வருவார்! அடித்துச் சொல்லும் சீமான்

புது வாக்காளர்களாக 4 லட்சம் பேர் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்

அதிர்ச்சி!  கரு கலைக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in