அதிர்ச்சி... தனது குட்டிகளின் பசியாற்ற 10 வயது சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தையால் நேரிட்ட பரிதாபம்!

சிறுத்தை
சிறுத்தை

தனது குட்டிகளின் பசியாற்ற 10 வயது சிறுமியை கவ்விக்கொண்டு கரும்புக் காட்டில் மறைந்த சிறுத்தையால் உத்திரபிரதேசம் பஹ்ரைச் பகுதி களேபரமானது.

நன்பரா வனப்பகுதிக்கு உட்பட்ட ஜுண்டி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ரம்பேட்டி என்ற 10 வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வெளிப்பட்ட சிறுத்தை ஒன்று, சிறுமியின் கழுத்தை கவ்விக் கொண்டு கரும்பு தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது.

அருகில் பெரியவர்கள் பலர் நடமாடியபோதும், விபத்துபோல சில விநாடிகளில் இந்த அதிர்ச்சி நிகழ்வு அரங்கேறியது. உடனடியாக கிராம மக்கள் ஒன்றுதிரண்டு கரும்பு வயலுக்குள் ஊடுருவிச் சென்றனர். மாலை வேளையில் இருட்டத் தொடங்கியிருந்ததால் சிறுத்தை மற்றும் சிறுமியை கண்டறிவதில் தடுமாற்றம் ஏற்பட்டது.

அப்போது கரும்பு வயலின் ஒரு மூலையில் கிராம மக்கள் கண்ட காட்சி அவர்களை அதிர வைத்தது. அங்கே தாய் ​​சிறுத்தைப்புலி, தனது குட்டிகளுடன் சிறுமியின் உடலை பிய்த்து தின்று கொண்டிருந்தது. சிறுத்தையை அங்கிருந்து விரட்டுவதற்கான கிராம மக்களின் ஆரம்ப முயற்சிகள் பலனளிக்கவில்லை. குட்டிகளுடன் சிறுத்தையும் கடும் பசியில் இருந்ததால், கிராம மக்களின் அச்சுறுத்தலுக்கு சிறுத்தைகள் அசைந்துகொடுக்கவில்லை.

சிறுத்தை
சிறுத்தை

பின்னர் கையில் ஏந்திய நெருப்புடன் போராடி, சிறுமியின் உடலை சிறுத்தைகளிடமிருந்து கிராம மக்கள் மீட்டனர். ஆனால் அதற்குள் சிறுமி பரிதாபமாக உயிரிழந்து இருந்தார். மேலும் அடையாளம் காண இயலாத வகையில் உடலின் பெரும் பகுதி தாய் மற்றும் குட்டி சிறுத்தைகளால் குதறப்பட்டிருந்தது.

தகவல் அறிந்த வனத்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாய் சிறுத்தை மற்றும் குட்டி சிறுத்தைகளை பிடிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட கூண்டுகள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருப்பதாக, பஹ்ரைச் பிரதேச வன அலுவலர் சஞ்சய் சர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in