குட்நியூஸ்... குறைந்து வரும் தங்கத்தின் விலை... மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

தங்கம்
தங்கம்

தீபாவளி நாளில் எந்த விதமான மாற்றமும் விற்பனையான ஆபரணத்தங்கம், இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ள நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்
தங்கம்

உலகம் முழுவதும் தீபாவளி நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தங்கத்தின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி விற்பனையானது. இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,600 ரூபாயாகவும், ஒரு சவரன் 44,800 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,590 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,720 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 6,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 48,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி 75.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 75,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!

ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!

திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!

300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in