அதிரடியாக குறைந்து வருகிறது தங்கத்தின் விலை! வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம்!

தங்கம்
தங்கம்

தீபாவளி பண்டிகை இன்னும் சில தினங்களில் உலகம் முழுவதும் கொண்டாட உள்ள நிலையில், தங்கத்தின் விலை அதிரடியாக இன்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்
தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,660 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 45,280 ரூபாய் ஆகவும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் 5,615 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,920 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, 6,085 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, 48,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

வெள்ளி
வெள்ளி

வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, 76.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 300 ரூபாய் குறைந்து 76,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தல தீபாவளி கொண்டாடும் மணமக்கள் வீட்டாருக்கு, தங்கம் விலை குறைந்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கனமழை... இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

உஷார்... இன்று முதல் இந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது!

தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்... சரக்கு போக்குவரத்து கடும் பாதிப்பு!

நெகிழ்ச்சி! சகோதரனின் குழந்தையை பெற்றெடுத்த பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in