சதமடித்த சின்ன வெங்காயத்தின் விலை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் நேற்று 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று விலை அதிகரித்து ரூ.100 முதல் 130 ரூபாய்க்கு விற்கபடுவதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோயம்பேடு காய்கறி சந்தை
கோயம்பேடு காய்கறி சந்தை

சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் இஞ்சி, வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது.

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும்,  பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10  ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 முதல் 130 ரூபாய்க்கும்,  பெரிய வெங்காயம் 1  கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகி வருகிறது.

பண்டிகை காலம் என்பதாலும் மழையின் காரணமாக வரத்து குறைந்ததாலும் அனைத்து காய்கறிகளும் விலை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெங்காயத்தின் விலை நூறு ரூபாயைத் தாண்டியுள்ளதால் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கலங்கிப் போய் உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in