காஸாவில் பெண்கள் படும் அவதிகள்... நாப்கின் பற்றாக்குறையால் பரிதாபம்!

காஸாவில் பெண்கள்
காஸாவில் பெண்கள்

இஸ்ரேல் - காஸா இடையே நடந்து வரும் போரின் காரணமாக காஸா  நகரில் அனைத்து பொருட்களுக்குமே கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் நாப்கின்கள் கிடைக்காததால் மாதவிடாய் கண்ட பெண்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

இஸ்ரேல் தாக்குதல் கடுமையாக நடந்துவரும் நிலையில், காஸாவுக்கு உண்வு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் சென்றடைவதில் தடைகள் இருப்பதாக  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.நா உட்பட சர்வதேச அமைப்புகள், நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காசா பெண்கள்
காசா பெண்கள்

இந்நிலையில் நிவாரணப் பொருட்கள் கிடைக்காததன் எதிரொலியாக, பாலஸ்தீனிய பெண்கள் பலரும் தங்கள் மாதவிடாய் காலத்தை தடுமாற்றத்தோடு எதிர்கொண்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பது, வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது, பல நூறு பேருக்கு மத்தியில் இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை, நாப்கின் - டேம்பான்ஸ் - மென்சுரல் கப் போன்றவை கிடைப்பதில் பிரச்னை போன்ற காரணங்களினால் அப்பெண்கள் தடுமாறி வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் கைவசமிருந்த, மாதவிடாயை தள்ளிப்போடுவதற்கான மாத்திரைகள் மூலமாக தற்காலிகமாக சமாளித்து வருகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in