இஸ்ரேல் தாக்குதலால் அதிர்ச்சி... முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே வெடித்துள்ள மோதலால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் கூகுள் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி பல நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது, ப்ராடெக்ட் டெக் முதல் மெஷின் லேர்னிங், செயற்கை நுண்ணறிவு வரையில் மிகப்பெரிய அளவில் அந்த நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

இதனால் உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் டெக் திறன்களையும், டெக் ஊழியர்களையும் பயன்படுத்திக்கொள்ள இஸ்ரேலில் அலுவலகத்தை திறந்துள்ளது. இதில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகியவையும் அடங்கும். இந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி சனிக்கிழமை காலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பின் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்துவதால் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் தற்போது பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்

பல அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையில், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை இஸ்ரேல்-க்கு ஆதரவாக நிற்கிறது. இதனால் சர்வதேச முதலீட்டு சந்தையில் பதற்றமான நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் ஆக்கிரமித்த காசா பகுதியை மொத்தமாக கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் படி, கூகுள் நிர்வாகம் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் கூகுள் ஊழியர்கள், இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் செய்யும் கூகுள் ஊழியர் என அனைவரையும் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுள்ளோம், மேலும் அவர்களுக்காக முழு ஒத்துழைப்பு அளிக்கவும் தயாராக இருப்பதாக இந்த இ-மெயிலில் தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை. மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்குமான பிரச்சினை குறித்து வருத்தம் தெரிவித்த சுந்தர் பிச்சை, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தான் நிர்வாகத்தின் முக்கிய பணி எனவும் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் ஹைஃபா, டெல் அவிவ் பகுதிகளில் 2 அலுவலகங்களை கூகுள் நிறுவனம் வைத்துள்ளது, இதில் சுமார் 2000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in