டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் அமெரிக்காவுக்கு ஆபத்து... நிக்கி ஹாலே குற்றச்சாட்டு

ட்ரம்ப், நிக்கி  ஹாலே
ட்ரம்ப், நிக்கி ஹாலே

டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்பது அமெரிக்காவுக்கு ஆபத்து என்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 போட்டியாளர்கள்
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 போட்டியாளர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வருடம் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அவருக்கு எதிராக இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்தவரும், ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதியாக இருந்த இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

நிக்கி ஹாலே தெற்கு கரோலினா மாகாண முதல் பெண் ஆளுநர் ஆவார். 2017-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் பணியாற்றிய ஒரே இந்திய அமெரிக்கர் நிக்கி ஹாலே ஆவார். 2024 ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் நிக்கி ஹாலே. இந்திய குடியரசுக் கட்சியின் வேட்பாளராக பிப்ரவரி 2023-ல் தேர்வு செய்யப்பட்டார்.

நிக்கி  ஹாலே
நிக்கி ஹாலே

இந்த நிலையில், லாஸ் வேகாஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிக்கி ஹாலே நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்," 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், அமெரிக்காவிற்கு ஆபத்தானது. நான்கு வருடங்கள் குழப்பத்தை சந்திக்க நேரிடும். அமெரிக்காவிற்கு ஒரு கேப்டன் தேவை. வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான காலக்கட்டத்தை நாம் கடந்து வருகிறோம்" என்றார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மற்றும் உக்ரேன் போர்களைக் குறிப்பிட்டு," உலகம் எரிந்து கொண்டிருக்கிறது" என்ற ஹாலே, " போரை நிறுத்துவது, அமைதியை நிலைநாட்டுவது மற்றும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதை விட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவான அதிபர் என்பது வரலாற்றில் இடம்பெறும். ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து அவர் விலகுவது அவசியம்" என்றும் கூறினார்."

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in