‘ஹமாஸ் உடனான போருக்குப் பின்னரும் காசா எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்’ இஸ்ரேல் திட்டவட்டம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஹமாஸ் உடனான போருக்குப் பின்னரும் காசா இஸ்ரேல் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் மீதான போர்த் தாக்குதலின் இரண்டாவது மாதத்தில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நுழைந்ததை அடுத்து, இஸ்ரேலுக்கு கடிவாளம் போட உலக நாடுகள் முயன்று வருகின்றன. இஸ்ரேலின் ஆத்ம நட்பு தேசமான அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன. ’மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை’ அமெரிக்கா வலியுறுத்த, ’அவசர போர் நிறுத்தத்துக்கு’ ஐநா வலியுறுத்தியது.

காசா உயிர்ப்பலிகள்
காசா உயிர்ப்பலிகள்

ஆனால், ’ஹமாஸ் வசமிருக்கும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என நெதன்யாகு அறிவித்திருக்கிறார். வேண்டுமானால் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேவைக்கேற்ப சில மணி நேர போர் நிறுத்தங்கள் சாத்தியம் என்றார். காசாவில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10,022 என அதிகரித்ததை அடுத்து இஸ்ரேலுக்கு உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே போர் தாக்குதல் இரண்டாவது மாதத்தில் நுழைந்ததை ஒட்டி நெதன்யாகு அளித்த பேட்டி ஒன்றில் புதிய அதிர்ச்சியை பாலஸ்தீனர்களுக்கு தந்திருக்கிறார். ’காசா மீதான போருக்குப் பின்னர் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கும்’ என அறிவித்தார். இதன்படி காசா இனி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என நெதன்யாகு உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

உருக்குலையும் காசா
உருக்குலையும் காசா

இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிரச் செய்திருக்கிறது. மேலும் தற்போதைக்கு போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் இறங்கி வராததும், அங்கே புதிய பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அரபு நாடுகள் திரள்வது, போரின் அளவு மற்றும் காலத்தை அதிகரிக்கவே செய்யும்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in