‘பாலஸ்தீன மக்கள் பாலைவனத்துக்கு ஓடட்டும்...’ அணுகுண்டு மிரட்டல் விடுத்த இஸ்ரேல் அமைச்சர் இடைநீக்கம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு  அமைச்சரவை பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக பிரதமர் பெஞ்சமின் நெதென்யாகு அறிவித்துள்ளார். 

ஹமாஸ் தீவிரவாதிகளின் அக்.7 தாக்குதலை அடுத்து, அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை இன்னும் 2 நாட்களில் முழு மாதத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தொடரும் தாக்குதலில் காசாவின் 9,500க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் குண்டுவீச்சில் உருக்குலைந்த காசா நகரம்
இஸ்ரேல் குண்டுவீச்சில் உருக்குலைந்த காசா நகரம்

அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. மத்திய கிழக்கின் அண்டை நாடுகள் பலவும் இஸ்ரேல் உடனான உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளன. ஆனால் ஐநா அமைப்பு உட்பட பல்வேறு தரப்பிலும் இருந்து முன்வைக்கப்பட்ட ’போர் நிறுத்தம்’ ஆலோசனையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் கலாச்சாரத்துறை அமைச்சர் அமிஹாய் எலியாஹூ என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். ”காசா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும்” என தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

அணு ஆயுத மிரட்டலை அடுத்து இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச நெருக்கடி அதிகரித்ததில், கலாச்சாரத்துறை அமைச்சர் அமிஹாய் எலியாஹூவை அமைச்சர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அமைச்சர் அமிஹாய் எலியாஹுவின் பேச்சு உண்மைக்கு புறம்பாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அப்பாவிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச சட்டத்தின்படி செயல்படுகின்றன. நாங்கள் வெற்றி பெறும் வரை இதனைத் தொடர்வோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in