தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்... பலி எண்ணிக்கை 3,600 ஆனது!

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் குண்டு மழை
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் குண்டு மழை

5வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இருதரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை 3600ஆக உயர்ந்துள்ளது. இது தவிரத்து அங்கத்திய நிலவரங்கள் அனைத்தும், போர் மேலும் தீவிரமடையக் கூடும் என்பதையே காட்டுகின்றன. இஸ்ரேல் - ஹமாஸ் போரின் அண்மை நகர்வுகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

ஹமாஸ் குழுவிடமிருந்து காஸா எல்லைப் பகுதிகளை முழுவதுமாக மீட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது. எனினும் வரலாற்றில் இல்லாத வகையில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் இறந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசா பகுதியில் இதுவரை 900 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளனர். இவற்றுக்கு அப்பால் இஸ்ரேல் எல்லைக்குள் சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளின் சடலங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வகையில் இதுவரை 3,600 உயிர்ப்பலிகள் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் நிகழ்ந்துள்ளன.

இஸ்ரேல் தாக்குதலுக்காக அணிவகுத்திருக்கும் அபாயகர குண்டுகள்
இஸ்ரேல் தாக்குதலுக்காக அணிவகுத்திருக்கும் அபாயகர குண்டுகள்

காசா பகுதியில் பாலஸ்தீனர்களின் குடியிருப்புகளில் இஸ்ரேல் வெடிகுண்டு வீசும் ஒவ்வொரு முறையும், தங்கள் வசமிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளில் ஒருவரை கொல்லப்போவதாக ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது. குழந்தைகள் உட்பட சுமார் 150 முதல் 200 வரையிலான பணயக்கைதிகள் ஹமாஸ் வசம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்கள், காஸாவுக்கு அப்பால் சிரியா மற்றும் லெபனான் நாடுகளில் இருந்தும் வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவுடன் அவற்றை ஹமாஸ் மேற்கொண்டதை அடுத்து, அந்த நிலைகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை மேற்கொண்டது.

இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் போராளிகளை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு குற்றம்சாட்டி உள்ளார். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காஸாவில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்து, ஹமாஸ் மீதான கோபத்தை நெதன்யாகு பதிவு செய்துள்ளார்.

முழங்கும் பீரங்கி
முழங்கும் பீரங்கி

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளன. ’பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால் ஹமாஸ் அமைப்பினர், பாலஸ்தீன மக்களுக்கு பயங்கரவாதம் மற்றும் ரத்தம் சிந்துதலைத் தவிர வேறு எதையும் வழங்கவில்லை" என இந்த நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அமெரிக்கா தனது போர்க்கப்பலை இஸ்ரேல் ஆதரவுக்கு அனுப்பி இருப்பதோடு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேல் சென்று மூத்த இஸ்ரேலிய தலைவர்களை சந்திக்க உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in