78 வயதில் குழந்தைக்குத் தந்தையான முதியவர் மரணம்: 25 வயது காதல் மனைவி அதிர்ச்சி!

ரேமண்ட் கால்வாட் தனது குழந்தை, மனைவியுடன்.
ரேமண்ட் கால்வாட் தனது குழந்தை, மனைவியுடன்.

78 வயதில் 25 வயது மனைவியின் மூலம் குழந்தை பெற்று  தந்தையான பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர்   வயது முதுமை காரணமாக உயிரிழந்தார்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்  ரேமண்ட் கால்வாட் ( 78). தொழிலதிபரான இவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவர் தனது 77 வயதில் 25 வயதான ஜேமிராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதலில் நண்பர்களாக பழகியவர்கள் காதலர்களாக மாறி அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இல்லற வாழ்க்கையின்  பயனாக  அந்த மனைவி மூலம் 78 வயதில்  ஒரு  குழந்தைக்கு தந்தையானார்.

இந்த செய்தி  பிரிட்டனில் பல்வேறு தரப்பினரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் அவர் நாடறிந்த பிரபலமானார். அவரைப் பற்றிய செய்திகள் அதிகம் படிக்கப்பட்டது.

மனைவியுடன் ரேமண்ட் கால்வாட்
மனைவியுடன் ரேமண்ட் கால்வாட்

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் அங்குள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்  வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி ஜேமிராய் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவருக்கு பலர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே... HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in