பிரேசிலில் மீண்டும் பயங்கர விமான விபத்து... 12 பேர் பரிதாப மரணம்!

பிரேசிலில் மீண்டும் பயங்கர விமான விபத்து... 12 பேர் பரிதாப மரணம்!

பிரேசிலின் அமேசான் பகுதியில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமான விபத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில், ஒன்பது பெரியவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை, அத்துடன் விமானி மற்றும் துணை விமானி அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதே போல், கடந்த செப்டம்பர் மாதம் பார்சிலோஸ் நகரில் புயலின் போது தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூன் மாதம், அமேசான் காட்டில் நடந்த விமான விபத்தில் காணாமல் போன நான்கு குழந்தைகள் 40 நாட்கள் கழித்து தீவிர தேடுதலில் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in