தீபாவளி கொண்டாட்டம்: அமெரிக்க அழைப்பை நிராகரித்த இந்திய வம்சாவளி பெண் கவிஞர்!

கவிஞர் ரூபி கவுர்
கவிஞர் ரூபி கவுர்

தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெள்ளை மாளிகை விடுத்த அழைப்பை இந்திய வம்சாவளி கவிஞரான ரூபி கவுர் நிராகரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் ரூபி கவுர்
கவிஞர் ரூபி கவுர்

இந்தியாவில் உள்ள பஞ்சாப்பில் பிறந்து கனடாவில் வசிப்பவர் பிரபல கவிஞர் ரூபி கவுர். இவரது கவிதை மற்றும் உரைநடைகளின் தொகுப்பு 'மில்க் அன்டு ஹனி' என்ற புத்தகம் 2014-ல் வெளியாகி உலகெங்கிலும் 2.5 மில்லியன் அளவிற்கு விற்பனையானது.

மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாக தி நியூயார்க் டைம்ஸின் சிறந்த புத்தகங்களின் விற்பனை பட்டியலில் இடம் பிடித்தது. இவரது இரண்டாவது புத்தகமான 'தி சன் அன்டு ஹர் ஃப்ளவர்ஸ்' 2017-ல் வெளியானது.

இந்த நிலையில் அமெரிக்காவில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நடத்தும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க கவிஞர் ரூபி கவுருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. ஆனால், வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரிப்பதாக ரூபி கவுர் கூறியுள்ளார்.

கவிஞர் ரூபி கவுர்
கவிஞர் ரூபி கவுர்

காஸா மீதான குண்டு வெடிப்புக்கு காரணமான இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதாகக் கூறியுள்ள ரூபி கவுர், காஸா மீது தொடர்ந்து குண்டுவீச்சுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிரவாகம் இஸ்ரேலுக்கு அளித்த ஆதரவே காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தீபாவளி பண்டிகை என்பது பொய்க்கு எதிரான நீதியின் கொண்டாட்டம். அறியாமைக்கு எதிரான அறிவின் கொண்டாட்டம். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தற்போதைய அட்டூழியங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்நாடு தீபாவளியைக் கொண்டாடுவதைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

ஒரு சீக்கியப் பெண்ணாக, அமெரிக்க நிர்வாகத்தின் செயல்களை மறைக்க எனது படத்தைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். இஸ்ரேலிய தாக்குதலுக்கு உலகளாவிய கண்டனம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. மனிதாபிமான துன்பங்களின் அளவு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. வாஷிங்டன் மற்றும் பிற அமெரிக்க நகரங்களில் போர்நிறுத்தம் கோரி ஏராளமான எதிர்ப்பாளர்கள் கூடியுள்ளனர்.

காஸாவில் தனது ராணுவ இலக்குகளைத் தொடர்வது கடினமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது உயர்மட்ட ஆலோசகர்களும் இஸ்ரேலை எச்சரித்துள்ளதாக கவுர் கூறினார். பைடன் காஸாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் அங்கு பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான மனிதாபிமான இடைநிறுத்தத்தை ஆதரிக்கிறார் என்று கவுர் குற்றம் சாட்டியுள்ளார்.

தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்க விடுத்த அமெரிக்காவின் அழைப்பை இந்திய வம்சாவளி பெண் கவிஞர் ரூபி கவுர் நிராகரித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in