நீட் தேர்வால் அடுத்த அதிர்ச்சி... களைக்கொல்லியை அருந்தி கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி மாணவி பைரவி
கள்ளக்குறிச்சி மாணவி பைரவி
Updated on
2 min read

நீட் தேர்வு அச்சத்தால் கள்ளக்குறிச்சி அருகே மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்கள்
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், எரவார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், பைரவி (18) என்ற மகளும் இருந்தனர். பெரிய சிறுவத்தூரில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பைரவி, பிளஸ் 2 வரை படித்தார். கடந்த வருடம் பிளஸ் 2 வகுப்பில் 485 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். 

இதனால் மருத்துவம் படிக்க பைரவி ஆசைப்பட்டதால், அவரது பெற்றோர் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் நீட் தேர்வு பயிற்சிக்காக சேர்த்துள்ளனர். ஆனால் தன்னால் சரியாக நீட் தேர்வு பயிற்சியில் படிக்க முடியவில்லை என தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பைரவி கூறி வந்துள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தில் முதன் முதலில் உயிரிழந்த மாணவி அனிதா
நீட் தேர்வு அச்சத்தில் முதன் முதலில் உயிரிழந்த மாணவி அனிதா

இதனால் மன அழுத்தத்தில் இருந்துவந்த அவர்  சில தினங்களுக்கு முன்  வயலுக்கு அடிக்கக்கூடிய களைக்கொல்லி மருந்து எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு  சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பைரவி உயிரிழந்தார். இது குறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் பைரவியின் தாயார் கவிதா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசு தலையிட்டு உடனடியாக நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு

நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!

சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in