கோயில் விழாக்களில் முஸ்லிம்கள் கடை வைக்க தடை... கர்நாடகாவில் பரபரப்பு!

மங்களூருவில் உள்ள மங்கலாதேவி கோயில்.
மங்களூருவில் உள்ள மங்கலாதேவி கோயில்.

கோயில் விழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் வைக்க கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டதை கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக முஸ்லிம் வியாபாரிகள் இன்று மனு அளித்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம். தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மங்கலாதேவி கோயில் நவராத்திரி விழா அக்.15-ம் தேதி முதல் அக்.24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் கண்காட்சியில் முஸ்லிம் வியாபாரிகள் பங்கேற்கக் கூடாது என கோயில் நிர்வாகம் முடிவு செய்து மங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட கோயிலுக்கு எதிரே உள்ள ரதபீடி தெருவில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் அதன் திருவிழாக்களை இங்கு ஏற்பாடு செய்து வருகிறது.

கடந்த ஆண்டு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்துவர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகாவில் முஸ்லிம் அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசு, முஸ்லிம் வணிகர்களை இந்து மதவிழாக்கள், கோயில் வளாகங்களில் கடை வைக்க அனுமதி மறுத்தது.

தற்போது காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், அதே நிலை நீடிப்பதாக முஸ்லிம் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக தட்சிண கன்னடா மாவட்ட ஆணையரிடம் முஸ்லிம் வியாபாரிகள் இன்று புகார் மனு அளித்தனர். கோயில் விழாக்களில் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் அதில் வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

இவ்விஷயத்தில் கர்நாடகாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் ஆட்சி என்ன செய்யப்போகிறது என்று முஸ்லிம் வியாபாரிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in