போராட்டத்தை வேடிக்கை பார்த்தது குற்றமா... இளைஞர் காங்கிரஸ் பெண்மணி ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு!

போலீஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மேகா ரஞ்சித்
போலீஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மேகா ரஞ்சித்

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தின் போது, போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் நிர்வாகி 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜனவரி 15-ம் தேதி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ராகுல் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் காயமடைந்த மேகா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது (கோப்பு படம்)
போராட்டத்தில் காயமடைந்த மேகா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது (கோப்பு படம்)

அப்போது போலீஸார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். அப்போது சாலையோரம் நின்றிருந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேகா ரஞ்சித், போலீஸாரின் தாக்குதலில் படுகாயம் அடைந்தார். கழுத்து மற்றும் தலையில் காயம்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, “கூட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னரும், துணை காவல் கண்காணிப்பாளர் சாலையோரம் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்” என போலீஸுக்கு எதிராக மேகா குற்றம் சாட்டினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேகா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேகா

இது அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி, தனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மேகா, கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி டி.ஆர்.ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேகாவின் மனு மீது அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார். இந்த சம்பவத்தின் போது மேகா மட்டுமின்றி மாவட்ட தலைவர் பிரவீனும் போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 25 லட்சம் ரூபாய் கடன்பெற்று காயம்குளம் பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்றை மேகா துவங்கினார். தற்போது பார்லரை நடத்த முடியாத வகையில், இரண்டு மாதங்களுக்கு அவரை ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in