தேன் எடுக்கச்சென்ற பெண்... துரத்தி துரத்தி மிதித்துக் கொன்ற யானை!

அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை
அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை
Updated on
2 min read

கேரளாவில் தேன் எடுக்கச்சென்ற பெண்ணை யானை தாக்கியதில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தேன் எடுத்தல்
தேன் எடுத்தல்

தெற்கு வயநாடு வனக்கோட்டத்துக்கு உள்பட்ட மேப்பாடி வனச்சரகத்தில்,பழங்குடியினர் காலனியைச் சேர்ந்த மின் என்ற பெண்ணும், அவரது கணவர் சுரேஷும் இன்று காலை அங்கு தேன் எடுக்கச்சென்றுள்ளனர். அப்போது அங்கு திடீரென வந்த காட்டுயானை மினியை துரத்தி துரத்தி மிதித்துக்கொன்றது. இதைக்கண்ட சுரேஷ் கூச்சலிட்டார். ஆனால், யானை அவரையும் துரத்தியதால் அவர் அங்கிருந்து வேகமாக ஓடி சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.

சுரேஷ் அளித்த தகவலின் பேரில், போலீஸ் குழு மற்றும் மூன்று வனத்துறை குழுக்கள் மேப்பாடி வனச்சரகத்துக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் சென்றனர். முதற்கட்டமாக அங்கு யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். தொடர்ந்து யானை மிதித்து உயிரிழந்த மினியின் உடலை தேடிக்கண்டுபிடித்து பின்னர் மலை சறுக்களில் போராடி எடுத்து வந்து, மலப்புரம், நீலம்பூர் அரசு மருத்துவமனையில் உடலை ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து சுரேஷும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அடந்த வனப்பகுதியில் இருந்த பரப்பன்பாறை பழங்குடியினர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். எனினும் சிலர், அவர்களது குலத்தொழிலான தேன் எடுப்பதற்காக அடர்ந்த வனப்பகுதிக்கு செல்லும் போது, இதுபோன்ற விபத்துகளில் சிக்குவதாக மேப்பாடி ரேஞ்ச் அதிகாரி டி ஹரிலால் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in