ஸ்வீட் ஸ்டாலில் பயங்கர தீ விபத்து; 8 வாகனங்களில் போராடி தீயணைப்பு: பெண் உயிரிழப்பு!

தீயணைப்பு வாகனம்
தீயணைப்பு வாகனம்

டெல்லியில் இன்று அதிகாலை ஸ்வீட் ஸ்டாலில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு டெல்லியின் ஷகர்பூரில் ஸ்வீட் ஸ்டால் உள்ளது. இன்று காலை இந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மூன்று மாடியிலும் பற்றியது. இதனால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஐந்து பேர் பால்கனியில் இருந்து குதித்தனர். டெல்லி தீயணைப்பு சேவைகள் துறையினர் தீ விபத்தில் சிக்கிய 26 பேரைக் காப்பாற்றினர். இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து டெல்லி தீயணைப்பு சேவைகள் துறையின்(டிஎஸ்எஃப்) தலைவர் அதுல் கர்க் கூறுகையில்," தீ விபத்து ஏற்பட்ட இடம் 200 சதுர அடி நிலம் தவிர மூன்று மாடி கட்டித்தில் தீப்பிடித்தது. 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் போராடி தீ அணைக்கப்பட்டது. உயிருக்குப் பயந்து பால்கனியில் இருந்து ஐந்து பேர் குதித்தனர்.

இவர்களுடன் சேர்த்து 10 பேர் குரு தேக் பகதூர் மருத்துவமனை, லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை மற்றும் டாக்டர் ஹெட்கேவார் ஆரோக்ய சன்ஸ்தான் ஆகிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது ஒரு பெண் உயிரிழந்தார்" என்றார்.

தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட டிஎஸ்எஃப் ஊழியர் காயமடைந்தார். அவரை இரண்டு நாய்கள் காயங்களுடன் மீட்டன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in