ஆசை வலை விரித்த கிரிப்டோ கரன்சி கும்பல்: திருவாரூரில் 300 பேரிடம் ரூ.5 கோடி மோசடி!

கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சி

திருவாரூரில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி 300 பேரிடம் 5 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நூர் இஸ்லாம், அகமது கபீர், நஸ்ருதீன், நஸ்ருல்லா மற்றும் ஜெயினுதின். இவர்கள் 5 பேரும் பூதமங்கலம், லட்சுமாங்குடி மற்றும் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த 300 பேரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இவர்களது பேச்சை நம்பி 10 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பலரும் முதலீடு செய்துள்ளனர்.

திருவாரூர் எஸ்பி அலுவலகம்
திருவாரூர் எஸ்பி அலுவலகம்

கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு அலுவலகம் இயங்குவதாக கூறி அந்த 5 பேரும், லட்சுமாங்குடியில் ஒரு கிளை அலுவலகத்தையும் திறந்து வைத்துள்ளனர். இந்நிலையில், அந்த கிளை அலுவலகம் அலுவலகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டுவிட்டது.

அதனைத் தொடர்ந்து பணம் வசூல் செய்த ஐந்து பேரையும் தொடர்புகொண்ட பொதுமக்கள் பணத்தைத் திருப்பி தரும்படி கேட்டபோது அவர்கள் உரிய பதிலைத் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பணம் கட்டியவர்கள் விசாரித்த போது, 5 பேரும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யாமல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணம் கொடுத்து ஏமாந்து போனவர்களில் 120 பேர் திருவாரூர் எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி ஜெயக்குமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மோசடி சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சனாதனம் குறித்து நான் பேசியது தவறில்லை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ... கொந்தளித்த அமிதாப் பச்சன்!

விஜய் நிச்சயமா அரசியலுக்கு வருவார்! அடித்துச் சொல்லும் சீமான்

புது வாக்காளர்களாக 4 லட்சம் பேர் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்

அதிர்ச்சி!  கரு கலைக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in