20 பேர் வேலை செய்து கொண்டிருந்த கடையில் கொள்ளை.. பட்டப்பகலில் கைவரிசை காட்டிய திருடன் கைது!

கொள்ளை போன கடை
கொள்ளை போன கடை

பூட்டிய கடையை உடைத்து கொள்ளையடிக்கும் காலம் மாறி பட்டப்பகலில் திறந்த கடையில் கொள்ளை நடந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட கொள்ளையன்
கைது செய்யப்பட்ட கொள்ளையன்

நாகர்கோவில் வடசேரியில் உள்ள இரும்புக்கடை ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பட்டறையிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய கார் ஓட்டுநர் பாக்கியதாஸை போலீஸார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக கோயில் உண்டியல் உடைப்பு, பூட்டிய வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பூட்டை உடைத்து கொள்ளை, கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சிசிடிவி கேமரா காட்சிகள் ஆங்காங்கே இருந்தும் கொள்ளையர்களைப் பிடிப்பது போலீஸாருக்கு சிரமமாக இருந்து வருகிறது.

வடசேரி காவல் நிலையம்
வடசேரி காவல் நிலையம்

இந்த நிலையில், கன்னியாகுமரியில் பூட்டிய கடைகளை கொள்ளை அடிக்கும் காலம் மாறி தற்போது திறந்திருக்கும் கடையிலேயே கொள்ளையடிக்கும் நிலைக்கு கொள்ளையர்கள் முன்னேறியுள்ளனர். நாகர்கோவில் வடசேரி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்கள் இன்று மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது பட்டறையில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை புதுக்கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பாக்கியதாஸ் கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரன் பேரில், அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in