குடியால் நேர்ந்த விபரீதம்... மது என நினைத்து தின்னரைக் குடித்த புதுமாப்பிள்ளை பலி!

மணிகண்டன்
மணிகண்டன்

மதுபாட்டில் என நினைத்து பெயிண்ட் அடிக்க உதவும் தின்னரைக் குடித்த புது மாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்து உள்ள வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த செப்டம்பர் 3-ம் தேதி நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த இவரது மாமா பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவருடைய வீட்டில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த வாரம் மது போதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டனுக்கும்  அவருடைய மனைவிக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மரணம்
மரணம்

போதையில் இருந்த மணிகண்டன் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வைத்திருந்த தின்னர் என்ற திரவத்தை எடுத்து குடித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சத்தம் போட்டார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போதையில் மது என நினைத்து தின்னரை தவறுதலாக குடித்த புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in