லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு... உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!

ரஜினிகாந்துடன் லதா.
ரஜினிகாந்துடன் லதா.

லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான மோசடி வழக்கை விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்திற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கோச்சடையான் திரைப்படம்
கோச்சடையான் திரைப்படம்

கடந்த 2014-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் 'கோச்சடையான்'. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் 'மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்' நிறுவனமும் ஒன்று.

இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பமிட்டிருந்தார்.

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

பின்பு முரளி கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் அபிர்சந்த் நஹாவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196,199, 420, 463 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அந்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் லதா ரஜினிகாந்துக்கு எதிரான இந்த மோசடி வழக்கை தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றத்திற்கு விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் மோசடி வழக்கில் விடுவிக்கக் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும், விசாரணைக்கு நீதிமன்றம் கேட்கும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் மத்தியஸ்தர்கள் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்பினருக்கும் அனுமதியளிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in