பேரதிர்ச்சி... 60 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தலைமையாசிரியர் கைது

60 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் கைது
60 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் கைது

ஹரியானாவில் பள்ளி மாணவிகள் 60க்கும் மேற்பட்டோருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் 15 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசுத்தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு 15 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

அதில், பள்ளியின் தலைமையாசிரியர், தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், இதை வெளியே சொன்னால், செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்துவிடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

60 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் கைது
60 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் கைது

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தனிப்படை அமைத்து தலைமறைவான ஆசிரியரை தேடி வந்தனர். கடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல், பள்ளியில் போலீஸார் நடத்திய விசாரணையில், சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு அந்த தலைமையாசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த தலைமையாசிரியரை நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

60 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் கைது
60 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் கைது

மேலும், பள்ளியில் பயிலும் இதர மாணவிகளில் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என விசாரித்து வருவதோடு, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in