மாயமான கால்வாய்... வீட்டை சூழ்ந்த மழைநீர்- தனியாக சிக்கிக்கொண்ட முதியவர்

மாயமான கால்வாய்... வீட்டை சூழ்ந்த மழைநீர்- தனியாக சிக்கிக்கொண்ட முதியவர்

ஈரோடு அருகே, கசிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக, மழைநீர் வீட்டை சூழ்ந்து ஓய்வு பெற்ற விஏஓ சிக்கிகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகே லக்காபுரத்தில் வசித்து வருபவர் பொன்னுசாமி (85). முன்னாள் கிராம நிர்வாக அலுவலர். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட பொன்னுசாமி எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ளார்.

இந்நிலையில் ஈரோடு பகுதியில் பெய்த மழையும், கீழ்பவானி பாசன பகுதிகளில் இருந்து வெளியேறிய கசிவுநீரும் லக்காபுரத்தில் பொன்னுசாமி வசித்து வரும் வீட்டிற்குள் புகுந்தது. இதனால் செய்வதறியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே பொன்னுசாமி முடங்கி கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் தாசில்தார் இளஞ்செழியன் ஆகியோர் அங்கு சென்று பொன்னுசாமியை அங்கிருந்து மீட்டு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான மருத்துவமனையில் தற்காலிகமாக தங்கவைத்தனர்.

பின்னர் பொன்னுசாமி வசித்து வரும் வீட்டின் பகுதிக்கான வரைபடத்தை ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் சுமார் 10 அடி ஆழமுடைய ஒரு கசிவுநீர் கால்வாய் மாயமானது தெரியவந்தது.

இதனையடுத்து இயந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள், அந்த பகுதியில் ஆக்கிரமித்து மறைக்கப்பட்டிருந்த கசிவு நீர்கால்வாயை கண்டுபிடித்து அதற்குள் நிரப்பட்டிருந்த மண் மற்றும் கான்கிரீட் கட்டுமானங்களை அகற்றி, பல ஆண்டுகளாக மாயமான கால்வாயை மீட்டனர். இதனால் பொன்னுசாமியின் வீட்டையும், அந்த பகுதியையும் சூழ்ந்திருந்த மழைநீர் மற்றும் பாசன கசிவுநீர் வடிந்தது.

இதையும் வாசிக்கலாமே...

2023 கிரிக்கெட் : சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள்... டாப் லிஸ்ட்டில் 3 இந்தியர்கள்!

நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!

கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!

மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!

அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in