உத்தராகண்ட் பயங்கரம்... குருத்வாரா கர சேவை தலைவர் சுட்டுக்கொலை; அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!

சிசிடிவி கேமராவில் பதிவான கொலையாளிகள்
சிசிடிவி கேமராவில் பதிவான கொலையாளிகள்

உத்தராகண்ட் மாநிலம், நானகமட்டா குருத்வாரா கர சேவை தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தராகண்ட் மாநிலம், நானகமட்டா நகரில் குருத்வாரா உள்ளது. இங்கு கர சேவை தலைவராக இருந்தவர் பாபா தர்செம் சிங். அங்குள்ள உதம் சிங் நகரில் இன்று காலை 6:30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பாபா தர்செம் சிங்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பாபா தர்செம் சிங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த உத்தராகண்ட் போலீஸார், கொலையாளிகளைப் பிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாபா தர்செம் சிங்
பாபா தர்செம் சிங்

அந்த காட்சிகளில் பதிவான விவரங்களைக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குருத்வாரா கர சேவகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு அமைதியை நிலைநாட்ட கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சீக்கிய சமூகத்தினர் அமைதியை கடைபிடிக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்குக்கு முன்னுரிமை அளிக்கவும், அனைத்து கோணங்களிலும் முழுமையாக விசாரணை நடத்தவும் சிறப்பு பணிக்குழுவுக்கு (எஸ்டிஎஃப்) உத்தரவிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பது மட்டுமின்றி, இந்த கொலையின் பின்னணியில் ஏதேனும் பெரிய சதித்திட்டம் உள்ளதா என்பதைக் கண்டறியவும் போலீஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in