கேஎஃப்சி சிப்ஸ் பாக்கெட்டில் ஸ்குரு...வாடிக்கையாளர் அதிர்ச்சி!

கேஎஃப்சி
கேஎஃப்சி

கேஎஃப்சி சிப்ஸ் பாக்கெட்டில் ஸ்குரு இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், இது தொடர்பாக அந்த நிறுவனத்திடம் முறையிட்டும் எந்தவிதமான பயனும் இல்லை எனக்கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேஎஃப்சி உணவின் மீதான பரவலான ஆர்வம் நம்மில் பலர் நன்கு அறிவோம். சுவையான அசைவ பர்கர்கள் முதல் சுவையான கோழி இறக்கைகள் வரை, அவர்களின் மெனு பலவிதமான விருப்பங்களை வழங்குகிறது. இருப்பினும், சமீபத்தில் நடந்த ஒரு அசாதாரண சம்பவம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இங்கிலாந்தில், ஒரு நபர் தனது கேஎஃப்சி உணவில் ஸ்குரு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். கடந்த வாரம் 25 வயதான கல்லும் ஃப்கன் என்பவர் கில்லிங்ஹாமில் உள்ள கேன்டர்பரி தெருவில் அமைந்துள்ள கேஎஃப்சி கடையில் இருந்து உணவை வாங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.

வீட்டிற்குத் திரும்பி, வாங்கிய வந்த உணவை சாப்பிட்ட போது ​​திடீரென ஏதோ உலோகம் இருப்பதை உணர்ந்துள்ளார். உடனடியாக வெளியே எடுத்து பார்த்த போது ஸ்குரு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுதொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். ஆனால் அவரின் புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இந்த மாதிரியான நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் பொருட்களை மிகவும் கவனமாக கையாள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in