பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்... புதுச்சேரியில் பரபரப்பு!

பூங்கா
பூங்கா
Updated on
1 min read

புதுச்சேரி பாரதி பூங்காவில் காதலர்கள் அத்துமீறுவதாக வந்த புகாரையடுத்து அங்கு வந்த காதலர்களை போலீஸார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

பூங்கா
பூங்கா

புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே பாரதி பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் வந்து செல்கின்றனர். இதேபோல் காதலர்களும் அதிக அளவில் தஞ்சம் அடைகின்றனர்.

பூங்காவுக்கு வரும் காதலர்கள் சிலர் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. இ்ந்தநிலையில் பெரியகடை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பூரணி மற்றும் போலீஸார் நேற்று பாரதி பூங்காவில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மரத்தின் கீழ் தனியாக அமர்ந்து அத்துமீறலில் ஈடுபட்ட சில காதல் ஜோடிகளைப் பிடித்து விசாரித்தனர்.

இதையடுத்து அவர்களது பெற்றோரின் செல்போன் எண்களை வாங்கி போலீஸார் பேசினர். தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்ட காதல் ஜோடிகளை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in