சாலையில் பரபரப்பு... பாரத்துடன் கவிழ்ந்த லாரி- பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

வளைவில் திரும்பிய லாரி கவிழ்ந்து விபத்து
வளைவில் திரும்பிய லாரி கவிழ்ந்து விபத்து

திருப்பூர் அருகே ராட்சத இயந்திரம் ஏற்றி வந்த லாரி ஒன்று திருப்பத்தில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து, மேற்கூரை சீட்டுகளை தயாரிக்கும் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை கூடலூரை சேர்ந்த மாதேஷ் (32) என்பவர் ஓட்டி வந்தார். லாரி அவினாசியை அடுத்த பழங்கரை ரவுண்டானா அருகே வளைவில் திரும்பிய போது எந்திரத்தை கட்டி வைத்திருந்த கட்டு திடீரென அவிழ்ந்தது. இதனால் பாரம் தாங்காமல் லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

லாரி கவிழ்ந்ததில் ரோட்டின் மைய தடுப்பு சுவர் சேதமடைந்தது. திருப்பூரிலிருந்து கோவை செல்லும் பிரதான சாலையில் நடந்த இந்த விபத்தால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸார் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in