
கேரளாவிலிருந்து மைசூருக்கு சுற்றுலா சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள புலப்பட்டா பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த 15 ஆசிரியர்கள், 135 மாணவர்கள் உட்பட 150 பேர் கல்வி சுற்றுலாவிற்காக மைசூரு சென்றிருந்தனர். அங்கு பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்த அவர்கள், நேற்று மைசூரு அரண்மனையைச் சுற்றிப்பார்த்துவிட்டு, இரவு தங்கும் விடுதிக்கு திரும்பினர்.
அப்போது, உடன் சென்றிருந்த ஸ்ரீசயனா என்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை ஆசிரியர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மாணவி மாரடைப்பு ஏற்பட்டதால் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மைசூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக இளவயதினர், விளையாடும் போதும், நடனமாடும் போதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்