அதிர்ச்சி... நெடுஞ்சாலையில் காத்துக்கிடந்த டிபன்பாக்ஸ் வெடிகுண்டு!

ஜம்முவில் நெடுஞ்சாலையில் கிடந்த டிபன்பாக்ஸ் வெடிகுண்டு
ஜம்முவில் நெடுஞ்சாலையில் கிடந்த டிபன்பாக்ஸ் வெடிகுண்டு

ஜம்முகாஷ்மீரில் நெடுஞ்சாலையில் கிடந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டை பறிமுதல் செய்துள்ள பாதுகாப்பு படையினர், அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதோடு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்முவின் நக்ரோடா பகுதியில் உள்ள சித்ரா நார்வால் தேசிய நெடுஞ்சாலையில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மோப்பநாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது, சாலையில் கிடந்த மர்மப் பொருள், மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் வகையை சேர்ந்த டிபன் பாக்ஸ் என்பதும், சுமார் 2 கிலோ எடை இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த குண்டை செயலிழக்கச் செய்த வெடிகுண்டு நிபுணர்கள், அதனை பத்திரமாக அகற்றினர்.

பாதுகாப்பு படையினர் பத்திரமாக வெடிகுண்டை செயலிழக்க செய்தனர்
பாதுகாப்பு படையினர் பத்திரமாக வெடிகுண்டை செயலிழக்க செய்தனர்

இதனிடையே, இந்த வெடிகுண்டை சாலையில் வீசிச்சென்றது யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நெடுஞ்சாலையை சேதப்படுத்தும் நோக்கில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டதா அல்லது வேறு சதிச்செயல் காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

ஜம்முவில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜம்முவில் பாதுகாப்பு அதிகரிப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in