கதவை உடைத்து உள்ளே புகுந்து மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்... அடுத்து செய்த அதிர்ச்சி காரியம்!

முபாரக். அர்பியா தாஜ்
முபாரக். அர்பியா தாஜ்

தன்னுடன் வாழ மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவர், கத்தியால் கழுத்தை அறுத்துக் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட அர்பியா தாஜ்.
கொலை செய்யப்பட்ட அர்பியா தாஜ்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு புறநகரில் உள்ள ஆனேகல் தாலுகாவில் உள்ள ஜிகானி நகரைச் சேர்ந்தவர் முபாரக்(28). இவரது மனைவி அர்பியா தாஜ்(24). இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு அர்பியா தாஜ் சென்றுள்ளார். ஒரு வாரத்தில் தாய் வீட்டுக்குச் சென்று விட்டு வீடு திரும்புகிறேன் என்று சொன்ன மனைவி, ஒரு மாதமாகியும் வீடு திரும்பாததால், முபாரக் தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆனால், கதவை அடைத்துக் கொண்ட அர்பியா தாஜ், உங்களுடன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று முபாரக்கிடம் கூறியுள்ளார். பலமுறை அழைத்தும் அவர் கதவைத் திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முபாரக், கோடாரியால் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றார். தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அர்பியாவின் தாய் ஓடி வந்துள்ளார். அப்போது முபாரக் கதவை பூட்டிக் கொண்டு கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜிகானி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அர்பியா தாஜ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகில் உயிருக்கு ஆபத்தான நிலையில் முபாரக் கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு ஜிகானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அர்பியா தாஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆனேகல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in