கோப்புப்படம்
கோப்புப்படம்

கைதிகள் தவறு செய்தால் தனிமைச் சிறையில் அடைப்பீர்களா?... சிறைத் துறையை விளாசிய நீதிமன்றம்!

தவறு செய்யும் கைதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தனிமைச் சிறையில் அடைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

புழல் சிறை
புழல் சிறை

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த ரோஷன் சல்மா, என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், விசாரணை கைதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவர் முகமது ரிப்பாஸை சிறைக் காவலர்கள் கண்ணன், சதீஷ் மற்றும் முரளி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை, காவலர்கள் ஷூ கால்களால் சரமாரியாக தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறைக் காவலர்கள் தாக்கியதில், முகமது ரிப்பாஸ் பலத்த காயமடைந்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, சோதனையின் போது ரிப்பாஸ் சிறை அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறினார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, ரிப்பாஸ் தற்போது தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரால் சிறைக் காவலர்களையும், சககைதிகளைக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, சிறைக்கைதிகள் ஏதேனும் தவறு செய்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, விதிகளை மீறி ஏன் தனிமை சிறையில் அடைக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், ரிப்பாஸை தனிமைச் சிறையில் இருந்து மாற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in