கோழிக்கோடு ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம்... நகை, பணத்துடன் மணப்பெண் எஸ்கேப்!

கோழிக்கோடு ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம்... நகை, பணத்துடன் மணப்பெண் எஸ்கேப்!

ஓய்வு பெற்ற மருத்துவரை மறுமணம் செய்வதாகக் கூறி அவரிடம் பணம், நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி

கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர், மறுமணம் செய்து கொள்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தார். இதையடுத்து காசர்கோட்டைச் சேர்ந்த இளம்பெண் உள்பட 5 பேர் கொண்ட குழு தொலைபேசியில் ஓய்வு பெற்ற மருத்துவரை தொட்ர்பு கொண்டது. அவர்களிடம் பேசிய போது, ஓய்வு பெற்ற மருத்துவருக்கு மணப்பெண் இருப்பதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் ஓய்வு பெற்ற மருத்துவருக்கு பெண்ணைப் பிடித்துப் போனது.

இதையடுத்து கோழிக்கோடு ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் திருமண நிச்சயதார்த்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இளம்பெண்ணின் உறவினர்கள் என அறிமுகப்படுத்தப்பட்ட சிலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அப்போது புதுமணத் தம்பதிகள் சேர்ந்து வாழ வாடகை வீடு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஓய்வு பெற்ற மருத்துவரிடம் அந்த கும்பல் கூறியுள்ளது. இதை நம்பி அந்த கும்பலிடம் மருத்துவர் வீட்டிற்காக ரூ-5 லட்சத்தைக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவரின் கைபேசி, மடிக்கணினி அடங்கிய பை, நகையுடன் மணப்பெண் உள்பட அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து ஓய்வு பெற்ற மருத்துவர், அவர்களைத் தொடர்பு கொண்ட போது, அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அப்போது தான், தன்னை அந்த கும்பல் ஏமாற்றியது மருத்துவருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து நடக்காவு காவல் நிலையத்தில் அவர் இன்று புகார் செய்தார். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அவரிடம் மோசடி நடத்திய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமணம் செய்வதாக ஆசைகாட்டி பணம், நகையோடு கும்பல் தலைமறைவாகியுள்ள சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி!

பகீர்... துப்பாக்கியுடன் முதல்வர் அருகே சென்று, மாலை அணிவித்த நபரால் பரபரப்பு!

நடிகர் அஜித்தின் காஸ்ட்லி கிஃப்ட்... ஆச்சரியத்தில் வில்லன் நடிகர்!

தேர்தல் திருவிழா.. பணம், நகை, மது, சேலை, லேப்டாப்... ரூ.71 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

அமீருக்கு அடுத்தடுத்து சிக்கல்... நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in