செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி... 30வது முறையாக காவல் நீட்டிப்பு!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 30வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐந்தாவது முறையாக கரூர் சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, திமுக அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார் செந்தில்பாலாஜி. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.

செந்தில்பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். சிறையில் இருந்தபடியே இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்த செந்தில்பாலாஜி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் இருந்து ஜாமீன்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி ஆஜரானார்.

விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்.4-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் 30வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in