பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்துக்கு எதிரான ஆபாச பதிவு... போலீஸ் விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு

கங்கனா ரனாவத் - சுப்ரியா ஷிரினேட்
கங்கனா ரனாவத் - சுப்ரியா ஷிரினேட்

பாலிவுட் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத்துக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஷிரினேட்டின் சமூக ஊடக கணக்குகளில் இருந்து ஆட்சேபனைக்குரிய பதிவு வெளியானது தொடர்பாக, காவல்துறை விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் இன்று உத்தரவிட்டிருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகையும் பாஜக அபிமானியுமான கங்கனா ரனாவத், மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி வெளியிடுவதில் பேர்போன கங்கனாவுக்கு எதிராகவே அவதூறும், ஆபாசமும் கலந்த ஆட்சேபனைக்குரிய பதிவு காங்கிரஸ் தரப்பிலிருந்து வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா
டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா

நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஷிரினேட்டின் சமூக வலைதள பக்கங்களில் திங்களன்று அவதூறு பதிவு வெளியானது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவிடம், டெல்லி துணைநிலை ஆளுநரான வினய் குமார் சக்சேனா இன்று உத்தரவிட்டார்.

மண்டி தொகுதியின் பாஜக வேட்பாளராக கங்கனா ரனவத் அறிவிக்கப்பட்டதை அடுத்து, சுப்ரியா ஷிரினேட்டின் சமூக ஊடக கணக்குகளில் இருந்து ஆட்சேபனைக்குரிய பதிவுகள் வெளியாயின. அதே வேகத்தில் அவை நீக்கப்படவும் செய்தன. இதனை கங்கனா மற்றும் பாஜகவினர் மட்டுமன்றி பொதுவெளியில் பலரும் கண்டித்தனர்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், அது தொடர்பாக சுப்ரியா ஷிரினேட் விளக்கம் ஒன்றை அளித்தார். “எனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அணுகிய மர்ம நப,ர் முற்றிலும் கேவலமான மற்றும் ஆட்சேபனைக்குரிய இடுகையை பதிவிட்டிருக்கிறார். அது பின்னர் அகற்றப்பட்டது. நான் அவ்வாறு செய்ய மாட்டேன் என்னை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனது பெயரை சமூக ஊடகங்களில் தவறாக பயன்படுத்துவதை கண்டறிந்து அது தொடர்பாகவும் புகாரும் அளித்துள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் உத்தரவை அடுத்து களத்தில் குதித்த டெல்லி போலீஸ் அதிகாரிகள், அவசியமெனில் அறிவியல் பூர்வமான விசாரணையையும் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவின் பின்னணியில் இருந்தவர்கள் யார், எவருடைய மொபைல் போன் இதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதையும் காவல்துறை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in