சென்னையில் குத்தகைக்கு வீடுகள் எடுத்து அடமானம் வைத்து ரூ.65 கோடி மோசடி... தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

வீடு குத்தகை எடுத்து அடமானம் வைத்து மோசடியில் ஈடுபடும் கும்பல்
வீடு குத்தகை எடுத்து அடமானம் வைத்து மோசடியில் ஈடுபடும் கும்பல்

குத்தகைக்கு எடுக்கும் வீடுகளை, முறைகேடாக அடமானம் வைத்து மோசடி செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கடந்த 2013-ம் ஆண்டு இவரது வீட்டை ராமலிங்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால், அந்த வீட்டை கனகராஜுக்கு தெரியாமல், அடமானம் வைத்து ராமலிங்கம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கனகராஜ், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் கைது செய்யப்பட்ட ராமலிங்கம், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ராமலிங்கத்திற்கு ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி கனகராஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அண்மைக்காலமாக இது போன்ற முறைகேடு புகார்கள் அதிகரித்து வருவதால் அது குறித்து விளக்கம் அளிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இது போன்ற முறைகேடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அதிகார எல்லைக்குள் மட்டும் 40 வழக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டு 67 வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தாம்பரம் காவல் ஆணையர் அதிகார எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளில் 13 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. அதில் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் அதிகார எல்லைக்குள் பதிவான 4 வழக்குகளில் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. அதில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் 4 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,020 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளது.

அரசின் அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி, 65 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடந்துள்ளதாக தெரியவருகிறது என தெரிவித்தார். மேலும் அடுத்தவர்கள் சொத்தை அடமானம் வைத்து பணத்தை எல்லாம் சுருட்டிய பின்னர், இந்த மோசடி கும்பல் இது சிவில் பிரச்சினை என திசைதிருப்பி வழக்கை இழுத்தடிப்பதாக அதிருப்தி தெரிவித்தார். சட்டத்தை தெளிவாக போலீஸார் புரிந்து கொள்ளாததால், 2013-ம் ஆண்டில் பதிவான மோசடி வழக்கில் கூட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாமல் உள்ளதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இது போன்ற மோசடி வழக்குகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதனால் இந்த மோசடி கும்பல் குறித்தும், மோசடி குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் டிஜிபியை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக நீதிபதி சேர்த்துக் கொண்டார். இது போன்ற மோசடியை தடுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in