சாலையில் பறந்த பாட்டில், கற்கள்... ரூட் தல பிரச்சினையால் மாணவர்கள் மோதல்...பொதுமக்கள் பீதி!

பஸ்சில் தொங்கும் மாணவர்கள்.
பஸ்சில் தொங்கும் மாணவர்கள்.

சென்னையில் ரூட் தல பிரச்சினை தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கற்கள், மதுபாட்டில்கள் வீசப்பட்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூட் தல என்ற பிரச்சினை அதிகரித்துக் காணப்பட்டது. பேருந்துகளில் பயணிப்பது மற்றும் கல்லூரி அருகில் உள்ள பகுதிகளில் பிரச்சினைகள் செய்வது போன்ற சட்டவிரோத சம்பவங்களில் மாணவர்கள் அடிக்கடி ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் ரூட் தல பிரச்சினைகள் சற்றே குறைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் ரூட் தல பிரச்சினை அதிகரிக்க துவங்கியுள்ளது.

சென்னை பேருந்தில் ஏறி ஆட்டம் போடும் மாணவர்கள்.
சென்னை பேருந்தில் ஏறி ஆட்டம் போடும் மாணவர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் நிலையம் ஒன்றில் இரு தரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில், ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். இதனால் ரயில் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அரும்பாக்கம் பகுதியில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. கற்கள், மது பாட்டில்கள் கொண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இது குறித்து தகவல் அறிந்ததை அடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து ரூட் தல பிரச்சினை இருந்து வருவதால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in