ஆந்திராவை அச்சுறுத்தும் ஜட்டி கேங்... சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீஸ் எச்சரிக்கை!

ஆந்திராவை அச்சுறுத்தும் ஜட்டி கேங்... சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீஸ் எச்சரிக்கை!

வட மாநிலங்களை அச்சுறுத்தி வந்த ஜட்டி கேங் கும்பல் தற்போது ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதியில் சுற்றி வருவதால் தனியாக இருப்பவர் பாதுகாப்பாக இருக்குமாறு திருப்பதி போலீஸார் எச்சரித்துள்ளனர்.

திருப்பதியில் உள்ள மாதிரி ஷோரூமில் மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்று அது தோல்வியில் முடிந்துள்ளது. இதேபோல திருப்பதியை அடுத்த செர்லோபள்ளி அருகே அதே பாணியில் மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்றுள்ளது. இதனையடுத்த அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் இரண்டு சம்பவங்களிலும் தொடர்புடையது, வட மாநிலங்களை திணறடித்த ’ஜட்டி கும்பல்’ என்பது அந்த சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், திருப்பதி போலீஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், ‘’திருப்பதியில்  ஜட்டி கேங் என்ற கொடூரமான கொள்ளை கும்பல், ஆட்கள் குறைந்த பகுதியில் கொள்ளை அட்டூழியத்தை காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், இரவு நேரத்தில் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டாலோ, வினோத சத்தம் கேட்டாலோ அல்லது தண்ணீர் வெளியேறுவது போன்ற சத்தம் கேட்டாலோ பொதுமக்கள் யாரும் உடனடியாக வெளியே சென்று பார்க்க வேண்டாம்.

இவர்கள் எளிதில் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக ஜட்டி மட்டுமே அணிந்து கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாகவும், கையில் கூர்மையான ஆயுதங்கள் வைத்து மிரட்டலில் இறங்குவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், இவர்கள் கொலை கூட செய்ய அஞ்சமாட்டார்கள்.

ஜட்டி கொள்ளை கும்பல் குறைந்த ஆட்கள் இருக்கும் பகுதியில் கைவரிசையை காட்டி வருவதால், அத்தகைய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன் வெளியூர் செல்லும் போது பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும்’’ என அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!

ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!

திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!

300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in