பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு... 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு... 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் பலியான நிலையில் 21 படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள தேடா இஸ்மாயில் கான் நகரத்தில் இன்று பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதில் சம்பவ இடத்தில் இருந்த 5 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். 21 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில் பாதுகாப்புப் படையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

2023 கிரிக்கெட் : சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள்... டாப் லிஸ்ட்டில் 3 இந்தியர்கள்!

நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!

கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!

மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!

அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!

x
காமதேனு
kamadenu.hindutamil.in