கார் கடத்தும் கும்பலில் காவல் துறை அதிகாரிகளின் மகன்கள்: அதிர்ந்து போன போலீஸார்!

கைது
கைது

பஞ்சாப்பில் கார் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் காவல் துறை அதிகாரிகளின் மகன்கள் என்ற அதிர்ச்சி தகவலை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ரஞ்சித் அவென்யூவில் நவ.5-ம் தேதி இரவு பிருந்தாவன் கார்டனில் வசிக்கும் அங்கூர் ஷர்மா சாப்பிட வந்தார். அப்போது கார்டன் வாசலில் அவரது காரை நிறுத்தியிருந்தார். அவர் சாப்பிட்டு விட்டு பில் செலுத்த சென்றார்.

அப்போது அவரது கார் ஸ்டார்ட் ஆனதுடன், சைரன் சத்தம் கேட்டுள்ளது. தனது பையில் சாவி இருக்கும் போது காரை யார் எடுத்தது என்ற அதிர்ச்சியுடன் அங்கு சென்றார். அப்போது ஒருவர் அவரது சாவியை பிடுங்கிக் கொண்டு அங்கூர் ஷர்மாவை தாக்கி விட்டு காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து அங்கூர் ஷர்மா போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கூர் ஷர்மாவின் ஆப்பிள் செல்போன் காரில் இருந்ததால் அதன் சிக்னலை வைத்து போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கார் கடத்தல் கும்பல் இருக்கும் இடம் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கார் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சாஹில் கில், ஜஷ்ன்பிரீத் சிங், ராஜன்தீப் சிங், குர்பிரீத் சிங் ஆகியோரை போலீஸார் சுற்றி வளைத்து நேற்று கைது செய்தனர். ஐந்தாவது குற்றவாளியான இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பப்லு தலைமறைவாகியுள்ளார். அத்துடன் திருடப்பட்ட ஸ்விப்ட் கார் மீட்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," கைது செய்யப்பட்ட கார் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரில் இரண்டு பேரின் தந்தையர் அமிர்தசரஸில் காவல் துறையில் ஏஎஸ்ஐகளாக பணியாற்றி வருகின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இநத கும்பல் எத்தனை இடத்தில் கார் திருடியுள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

கார் கடத்தலில் காவல் துறையைச் சேர்ந்த ஏஎஸ்ஐக்களின் மகன்கள் சம்பந்தப்பட்டுள்ளது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in